என் மலர்

    செய்திகள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி வெற்றி
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காரைக்குடி அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காரைக்குடி அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி காளை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, ராஜ்குமார் ஆகியோர் களம் இறங்கினார்கள். திண்டுக்கல் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ராஜ்குமார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் கண்ட ஆர்.சீனிவாசன் 12 ரன்னில் அவுட் ஆனார்.

    அடித்து ஆடிய விஷால் வைத்யா 37 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து பத்ரிநாத் 26 ரன்னிலும், (28 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஷாஜகான் 20 ரன்னிலும் (15 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஆதித்யா 10 ரன்னிலும் (9 பந்துகளில் ஒரு சிக்சருடன்), கணபதி 18 ரன்னிலும் (11 பந்துகளில் 2 சிக்சருடனும்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காரைக்குடி காளை அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. சோனு யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், லோகேஷ்வர் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வில்கின்ஸ் விக்டர், சஞ்சய் தலா 2 விக்கெட்டும், நடராஜன், ஆதித்யா அருண் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் காரைக்குடி காளை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்பிரமணிய சிவா 17 ரன்னிலும், ஜெகதீசன் 14 ரன்னிலும், அஸ்வின் வெங்கட்ராமன் 3 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 27 ரன்னிலும், வில்கின்ஸ் விக்டர் 8 ரன்னிலும், சன்னிகுமார் சிங் 3 ரன்னிலும், விவேக் 32 ரன்னிலும், ஆதித்யா அருண் 14 ரன்னிலும், கிஷன் குமார் 14 ரன்னிலும், சஞ்சய் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். காரைக்குடி அணி தரப்பில் மோகன் பிரசாத் 4 விக்கெட்டும், கணபதி 2 விக்கெட்டும், சோனு யாதவ், ராஜ்குமார், சுரேஷ்பாபு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    6-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
    Next Story
    ×