என் மலர்

  செய்திகள்

  மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல்
  X

  மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார்.
  ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

  காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

  முதல் போட்டி முடிந்த பின்னர் மலிங்காவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சோதனை செய்தபோது, அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் 48 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் நாளை நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் சண்டகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  மலிங்கா இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன் முத்தையா முரளீதரன், சமிந்த வாஸ், சனத் ஜெயசூர்யா ஆகியோர் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.
  Next Story
  ×