search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியது: வங்காள தேசத்திற்கு எதிராக இங்கிலாந்து பீல்டிங் தேர்வு
    X

    சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியது: வங்காள தேசத்திற்கு எதிராக இங்கிலாந்து பீல்டிங் தேர்வு

    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் வங்காள தேசத்திற்கு எதிராக இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள போட்டியை நடத்தும் இங்கிலாந்து வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் வெற்றி பெற்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. வங்காள தேசம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. ஹேல்ஸ், 2. ஜேசன் ராய், 3. மோர்கன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. பட்லர், 6. மொயீன் அலி, 7. கிறிஸ் வோக்ஸ், 8. பிளங்கெட், 9. வுட், 10. ஜேக் பால் 11. ஜோ ரூட்

    வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. தமீம் இக்பால், 2. சவுமியா சர்கர், 3. இம்ருல் கெய்ஸ், 4. ஷகிப் அல் ஹசன், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. சபீர் ரஹ்மான், 7. மெஹ்முதுல்லா, 8. மொசாடெக் ஹொசைன், 9. மோர்தசா, 10. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன்.
    Next Story
    ×