என் மலர்

  செய்திகள்

  14 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்
  X

  14 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் 17 விக்கெட்க்கள் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்.
  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரஷித் கான். 18 வயதே ஆகும் இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக சிறந்த வகையில் பந்து வீசி வருகிறார். லெக் ஸ்பின்னராக இவர் கூக்ளி பந்து வீச்சில் வல்லவர். கூக்ளியால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறிடித்து விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகிறார்.

  ஆப்கானிஸ்தானில் போருக்கிடையிலும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு சிறந்த வீரராக வளம் வந்த ரஷித் கான், முதன்முறையாக 2017 ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்தார். இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

  4 கோடி ரூபாய்க்கு ரஷித் கான் தகுதியானவரா? என்ற கேள்வி எழும்பியது. ஐ.பி.எல். தொடரில் ரஷிக் கான் சன்ரைசர்ஸ் அணியின் ஆடம் லெவனில் இடம்பிடிப்பாரா? என்ற கேள்வியும் எழும்பியது.  கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் இலங்கை தொடரில் விளையாடியதால் இந்த தொடரின் தொடக்கத்தில் பங்கேற்கவில்லை.

  இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் இடம்பிடித்தார். ராயல் சேலஞ்சஸ் அணி 172 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங் செய்யும்போது, தொடக்க வீரர் மந்தீப் சிங்கை 24 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாக்கி தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். அத்துடன் ட்ராவிஸ் ஹெட்டையும் வீழ்த்தி இந்த போட்டியில் நான்கு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  2-வது போட்டியில் குஜராத் அணிக்கெதிராக மெக்கல்லம் (5), சுரேஷ் ரெய்னா (5), ஆரோன் பிஞ்ச் (3) ஆகிய விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் ஐதராபாத் அணியின் நம்பிக்கையை பெற்றார்.

  தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ரஷித் கான் இடம்பிடித்து நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இவரது பந்தை எதிர்கொள்ள எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். நேற்றைய போட்டியுடன் 14 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 324 பந்தில் 358 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார் (ஒரு ஓவருக்கு சராசரியாக 6.62 ரன்கள்). இது மிகப்பெரிய பந்து வீச்சாகும்.  தற்போது சிறந்த பந்து வீச்சில் 5-வது இடத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

  இதன்மூலம் நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதற்கு, தான் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார் ரஷித் கான்.
  Next Story
  ×