என் மலர்
செய்திகள்

உடைந்த மணிக்கட்டுடன் விளையாடினேன்: காயம் குறித்து முரளி விஜய் கருத்து
காயத்திற்காக ஆபரேசன் செய்து கொண்ட இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான முரளி விஜய், மணிக்கட்டு முறிந்த நிலையிலும் விளையாடினேன் என்று கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் முரளி விஜய். இந்திய டெஸ்ட் அணி 2016-17 சீசனில் சொந்த மண்ணில் 13 போட்டிகளில் தொடர்ந்து விளையாடியது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றவர் முரளி விஜய்.
இந்த சீசனில் 771 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்திற்கு எதிராக கான்பூர் டெஸ்டில் இரண்டு அரைசதம் அடித்தார். இங்கிலாந்திற்கு எதிராக இரண்டு சதங்களும், வங்காள தேசத்திற்கு எதிராக ஒரு சதமும் அடித்தார். நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ராஞ்சி போட்டியில் அரைசதம் அடித்த அவர், மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கான அனைத்து வீரர்களும் தயாராக இருந்தார்கள். ஆனால் முரளி விஜய் தனது மணிக்கட்டில் உள்ள காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். காயத்தின் வீரியம் அதிகமாகிக் கொண்டிருந்ததால் ஆபரேசன் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி லண்டன் சென்று ஆபரேசன் செய்து கொண்டு நேற்று முன்தினம் (16-ந்தேதி) இந்தியா திரும்பியுள்ளார்.
காயம் குறித்து முரளி விஜய் கூறுகையில் நான் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விளையாடினேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘என்னுடைய மணிக்கட்டின் காயத்தை மேலும் வீரியமிக்கதாக கொண்டு செல்லவிரும்பவில்லை. ஆனால், மணிக்கட்டில் ஏற்பட்ட முறிவுடன்தான் விளையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு கடினமான சூழ்நிலையாக இருந்தது. ஆனால், அப்போது அணியின் நலன்தான் எனக்கு முதன்மையாக இருந்தது. காயம் அதிகரித்து விடும் என்பதால் என்னால் ப்ரீயாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட ஷாட்டுகளை என்னால் விளையாட முடியவில்லை. குறிப்பாக வேகப்பந்துகளை முன்னால் வந்து எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் பேட்டின் கீழ்ப்பகுதியில் பிடித்திருந்த கையில்தான் (வலது கை மணிக்கட்டு) காயம் ஏற்பட்டிருந்தது.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நான் பவரான ஹிட் ஷாட் அடிக்கவில்லை. ஸ்பின்னருக்கு எதிராக இதுபோன்ற பவரான கட் ஷாட் அடிக்கவில்லை என்றால், அது பேட்ஸ்மேனின் முன்னேற்றத்தை தடுத்துவிடும். இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது. ஆனால், இதை நான் சவாலாக பார்த்தேன். ஏனென்றால், எதுவுமே எளிதாக வந்து விடாது. இதில் இருந்து நாள் ஏராளமானவற்றை கற்றுக் கொண்டேன்.
என்னுடைய உடலமைப்பு உண்மையான உணர்வை உங்களுக்கு வெளிப்படுத்தாது. நான் வலியோடுதான் இருந்தேன். ஆனால், அந்த வலியை வெளிக்காட்டி அனுதாபம் தேடுவது என்னுடைய குணம் அல்ல.
நான் காயத்தில் இருந்து மீண்டு வரும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் மீண்டும் பேட்டிங் செய்வேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Next Story