என் மலர்

    செய்திகள்

    குஜராத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்: ஆர்.சி.பி.-க்கு பின்னடைவு
    X

    குஜராத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்: ஆர்.சி.பி.-க்கு பின்னடைவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காயம் காரணமாக இன்றைய குஜராத்திற்கு எதிரான போட்டியில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.
    ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ். முதுகுவலி காரணமாக ஐபிஎல் தொடக்கத்தில் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. பின்னர் ஆர்.சி.பி. விளையாடிய மூன்று போட்டிகளிலும் விளையாடினார்.

    இன்று ஆர்.சி.பி., குஜராத் அணியை எதிர்த்து ராஜ்கோட்டில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். ஏனெனில், இரண்டு அணிகளும் ஐந்து போட்டிகள் முடிவில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை இழந்துவிடும்.

    இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டிக்காக இரு அணிகளும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் ஆர்.சி.பி. அணி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘இன்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் காயம் காரணமாக டி வில்லியர்ஸ் பங்கேற்கமாட்டார்’’ என்று தெரிவித்துள்ளது.

    இதை டி வில்லியர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். முக்கியமான போட்டியில் டி வில்லியர்ஸ் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×