என் மலர்
செய்திகள்

மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பி.வி.சிந்து பின்னடைவு
மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பி.வி.சிந்து 3 இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2வது இடத்தில் இருந்து இறங்கி 5வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் பைனலில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து சிந்து தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.

இந்நிலையில், மலேசியன் ஓபன் பேட்மின்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே சிந்து வெளியேறினார். இதையடுத்து உலக பேட்மின்டன் தரவரிசையில் 3 இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 9-வது இடத்தில் உள்ளார்.

Next Story