என் மலர்

  செய்திகள்

  பாதாளத்தில் விழுந்த மும்பை அணியை, அதிரடி மூலம் மீட்ட பொல்லார்டு
  X

  பாதாளத்தில் விழுந்த மும்பை அணியை, அதிரடி மூலம் மீட்ட பொல்லார்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்
  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். தொடரின் 12-வது போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.

  அதன்பின் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த 7 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது மும்பை. அடுத்து வந்த ராணா 11 ரன்களில் வெளியேறினார். அப்போது மும்பை அணி 8 ஓவரில் 33 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

  6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் விக்கெட்டுக்களை காப்பாற்றுவதற்காக நிதானமாக விளையாடிய பொல்லார்டு அதன்பின் அதிரடியாக விளையாடினார்.

  13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 70 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 42 பந்தில் 73 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின் பொல்லார்டு அதிரடி வாணவேடிக்கை விட ஆரம்பித்தார். 14-வது ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசினார். 15-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பொல்லார்டு 16-வது ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸ் விளாசினார். 18-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ் விளாசி பொல்லார்டு, அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார்.



  பொல்லார்டின் அதிரடியால் மும்பை அணி வெற்றி உறுதியானது. அடுத்து குருணால் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா 19-வது ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். மும்பை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  ஐதராபாத் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆனால், மற்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் 3 ஓவரில் 31 ரன்னும், நெஹி 2 ஓவரில் 28 ரன்களும் கொடுத்தனர்.
  Next Story
  ×