search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர் தேவை: உமேஷ் யாதவ் சொல்கிறார்
    X

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர் தேவை: உமேஷ் யாதவ் சொல்கிறார்

    இசாந்த் சர்மா, பும்ப்ரா, மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றம் என்னைப் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகக்பந்து வீச்சாளராக உருவாகியிருப்பவர் உமேஷ் யாதவ். இந்திய அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 13 டெஸ்டில் விளையாடியது. மொகமது ஷமி காயத்தால் இந்திய அணியில் இடம்பெற முடியாததால் உமேஷ் யாதவ் அனைத்து போட்டிகளிலும் இடம்பிடித்தார். அதோடு மட்டுமல்லாமல் அபாரமான பந்து வீச்சையும் வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் நம்பமுடியாத அளவிற்கு அவருடைய பந்து வீச்சு இருந்தது. 2-வது இன்னிங்சில் வார்னர், ரென்ஷாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அதிர வைத்தார்.

    இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய அணி, வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று எல்லோரும் கூறி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பும்ப்ரா, ஷமி, இசாந்த் சர்மா, புவனேஸ்குமார் மற்றும் என்னை போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தற்போது நாம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் தொடரை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். என்னுடன் மொகமது ஷமி, இசாந்த் சர்மா, புவனேஸ்குமார் போன்ற முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    நாங்கள் மேலும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைய ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். சிலபோட்டிகளில் நான் மோசமாக பந்து வீசியிருப்பேன். நான் என்ன தவறு செய்தேன், அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து புரிந்து கொள்ள முடியாது. வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரால் எங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி பந்து வீச்சு மேம்படுத்த உதவி செய்ய முடியும்’’ என்றார்.
    Next Story
    ×