என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல்.: மும்பை அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
  X

  ஐ.பி.எல்.: மும்பை அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 10-வது போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
  ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

  தொடக்க வீரர்களாக தவானும், டேவிட் வார்னரும் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நீண்ட நேரம் அவுட்டாகாமல் இருந்தாலும் மும்பையின் பந்து வீச்சை துவம்சம் செய்ய திணறினார்கள்.

  ஐதராபாத் அணி 10.2 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. 34 பந்தில் 49 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர், ஹர்பஜன் சிங் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 9 ரன்னில் வெளியேற, தவான் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

  அதன்பின் வந்த யுவராஜ் சிங் (5), கட்டிங் (20), விஜய் சங்கர் (1), ஓஜா (9), ரஷித் கான் (2) சொற்ப ரன்களில் வெளியேற ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி சார்பில் பும்ப்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

  பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.
  Next Story
  ×