search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வெளிநாட்டில் இந்தியா சாதிக்கும்: பிரெட் லீ சொல்கிறார்
    X

    தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வெளிநாட்டில் இந்தியா சாதிக்கும்: பிரெட் லீ சொல்கிறார்

    தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வெளிநாட்டு மண்ணில் இந்தியா சாதிக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியுள்ளது. நியூசிலாந்து. இங்கிலாந்து, வங்காள தேசம் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய அனைத்து தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்தியா உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்துள்ள நிலையில், இனிமேல் வெளிநாடு சென்று விளையாட இருக்கிறது. பொதுவாக இந்தியா வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. ஆனால் தற்போது இந்திய அணியில் இசாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சமீப காலமாக இவர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். இதனால் இந்தியா வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ, வெளிநாட்டு மண்ணில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘இந்திய அணி மிக்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது. பும்ப்ரா சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசுகிறார்கள். இசாந்த் சர்மா 70 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் பெற்றுள்ளார். உமேஷ் யாதவ் மிகவும் வேகமாக பந்து வீசுகிறார்.

    அதிக அளவில் பந்து வீச விசத்தான் உமேஷ் யாதவின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று சச்சின் கூறிய கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். பந்து வீசவீசத்தான் அவர்களின் ரிதம், உத்வேகம் மேம்படும்’’ என்றார்.
    Next Story
    ×