என் மலர்

  செய்திகள்

  டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா?
  X

  டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன.
  ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார்.

  23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார். 2012-ம் ஆண்டு வரை அந்த கிளப்பிற்காக விளையாடிய அவர், பின்னர் இத்தாலியின் பாலிர்மோ அணிக்கு மாறினார். 2015-ம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடிய அவர், அதன்பின் இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணிக்கு மாறினார். தற்போது அந்த அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 58 போட்டிகளில் 27 கோல்கள் அடித்துள்ளார்.

  இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் டைபாலாவை இந்த டிரான்ஸ்பர் நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சியா ஆகிய அணிகள் குறிவைத்துள்ளன.  23 மில்லியன் பவுண்டுக்கு யுவான்டஸ் அணி டைபாலாவை வாங்கியது. தற்போது இவருக்கு 100 மில்லியன் பவுண்டு (சுமார் 808 கோடி ரூபாய்) நிலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த விலை கொடுத்து வாங்க கிளப்புகள் தயாராக உள்ளன. ஒருவேளை 100 மில்லியன் பவுண்டுக்கு டைபாலா விற்கப்பட்டால் கால்பந்து கிளப் வரலாற்றில் இதுதான் அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகையாகும்.

  இதற்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணி போக்பாவை 89.3 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கியதுதான் சாதனையாக உள்ளது.
  Next Story
  ×