என் மலர்

  செய்திகள்

  இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அதிக ரசிகர்கள்: கோலி முதலிடம், டோனிக்கு 2-வது இடம்
  X

  இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அதிக ரசிகர்கள்: கோலி முதலிடம், டோனிக்கு 2-வது இடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் விராட் கோலியை அதிக அளவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். 2-வது இடத்தில் விராட் கோலி உள்ளார்.
  தற்போது ஐ.பி.எல். 2017 சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இவர்களை சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். ரசிகர்கள் அதிக அளவில் பின்தொடரும் பட்டியலை சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

  இதில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இவர் தன்னுடைய போட்டோ மற்றும் கருத்துக்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்கிறார். இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் அவரை பின்தொடர்கிறார்கள்.

  இதைபோல் அனைத்து வீரர்களையும் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்தியாவின் சாதனைக் கேப்டன் டோனி 2-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 12.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 34.5 மில்லியன் லைக்ஸ் உள்ளன.

  டோனிக்கு இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 20.4 மில்லியன் லைக்ஸ் உள்ளன.

  பேஸ்புக்கில் அதிக லைக் உள்ள டாப்-10 வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  2. டோனி (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)
  3. யுவராஜ் சிங் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  4. ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  5. சாஹிப் அல் ஹசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  6. கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  7. தவான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  8. காம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  9. மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

  இன்ஸ்டாகிராமில் அதிக வாசகர்களை கொண்ட டாப்-10 வீரர்கள்:-

  1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  2. டோனி (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)
  3. ஏபி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  4. யுவராஜ் சிங் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  5. ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  6. சுரேஷ் ரெய்னா (குஜராத் லயன்ஸ்)
  7. கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  8. ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ்)
  9. ஜடேஜா (குஜராத் லயன்ஸ்)
  10. ரகானே (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)
  Next Story
  ×