என் மலர்

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம்: பெங்களூருவை சேர்ந்தவர் கைது
    X

    ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம்: பெங்களூருவை சேர்ந்தவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த ஒருவரை கைது செய்து பணம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
    பெங்களூரு:

    கடந்த 9-ந்தேதி ஐதராபாத் சன்ரைஸ் - குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு ஆட்டங்கள் நடந்தது.

    இந்த இரண்டு கிரிக்கெட் ஆட்டத்தின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை பெங்களூரு சுப்ரமணிய நகர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது பெயர் நிர்மல்குமார் என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, காயத்திரி நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் பேசிய அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் செல்போன்களில் சூதாட்டம் தொடர்பாக என்ன? என்ன? பேசினார்கள் என்பது குறித்த முழு விபரங்களும் தெரியவரும்.

    இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×