search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி அணி வெற்றி கணக்கை தொடங்குமா?: புனேயுடன் இன்று மோதல்
    X

    டெல்லி அணி வெற்றி கணக்கை தொடங்குமா?: புனேயுடன் இன்று மோதல்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
    புனே :

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் புனேயில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான புனே அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் வீழ்ந்தது.



    புனே அணியில் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், டோனி, இம்ரான் தாஹிர், ரஜத் பாட்டியா, மனோஜ்திவாரி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். டெல்லி அணியில் ரிஷாப் பான்ட், கிறிஸ் மோரிஸ், பிராத்வெயிட், கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, கருண்நாயர் போன்ற எதிரணிக்கு சவால் அளிக்கும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த போட்டி தொடரில் வெற்றி கணக்கை தொடங்க டெல்லி அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் புனே அணி 2-வது வெற்றியை ருசிக்க தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டி தொடரில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரண்டு முறையும் புனே அணி தான் வெற்றி கண்டுள்ளது.
    Next Story
    ×