என் மலர்
செய்திகள்

உலகத் தரவரிசை: பிவி சிந்து 2-வது இடத்திற்கு முன்னேறினார்
உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து தனது சிறந்த நிலையாக, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து, முன்னணி வீராங்கனையான கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் உலகத் தரவரிசையில் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் 5-வது இடத்தில் இருந்தார்.

சீன தைபே வீராங்கனை தை சு யிங் 87911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். சிந்து 75759 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கரோலினா மரின் 3-வது இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒரு இடம் பின்தங்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளார்.

Next Story