search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளூர் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்
    X

    உள்ளூர் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்

    கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    கொல்கத்தாவில் 2-வது டிவிஷன் லீக் பிளே-ஆப் மேட்ச் இன்று நடைபெற்றது. டால்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரியாடாஹா ஸ்போர்ட்டிங் கிளப்பும், நேஷனல் அத்லெடிக் கிளப்பும் மோதின.

    இரண்டு நாள் கொண்ட போட்டியில் நேஷனல் அத்லெடிக் அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோரை எளிதில் எட்டிவிடலாம் என்று நினைத்த அந்த அணியின் கனவை, அரியாடாஹா அணியின் லெஃப்ட் ஆர்ம் சுழற்பந்து வீச்சாளர் மொகமது சாய் தகர்த்து விட்டார்.

    இவர் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்களையும் சாய்த்து விட்டார். 99 ரன்களில் சுருட்டியதால் 38  ரன்கள் வித்தியாசத்தில் அரியாடாஹா அணி வெற்றி பெற்றது. இரண்டு நாள் கொண்ட போட்டி ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.

    சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஜிம்லேகர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர்.
    Next Story
    ×