என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி.
    X

    மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி.

    பிரான்ஸ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொனாகோவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பி.எஸ்.ஜி.
    பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் லீக் 1. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் பி.எஸ்.ஜி. அணி 4-1 என மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. முதல் கோலை பி.எஸ்.ஜி. அணி அடித்தது, அதற்கு மொனாகோ அணி பதில் கோல் அடித்தது. அதன்பிறகு பி.எஸ்.ஜி. அணி தொடர்ந்து இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பி.எஸ்.ஜி. ரசிகர்கள் வெற்றி மகிழ்ச்சியில் மைதானத்தின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பி.எஸ்.ஜி. அணிக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×