என் மலர்

  செய்திகள்

  லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீது சட்ட நடவடிக்கை
  X

  லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீது சட்ட நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த தவறிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது என்று புதிய நிர்வாக குழு முடிவு செய்யப்பட்டது.

  புதுடெல்லி:

  லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலம் தாழ்த்தியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ) 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை (சி.ஓ.ஏ) சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

  வினோத்ராய் தலைமையிலான கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த தவறிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

  பல்வேறு மாநில சங்கங்களில் லோதா கமிட்டி பரிந்துரையை அமல் படுத்தவில்லை. மேலும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு எந்த இடையூறு செய்தாலும் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் மாநில சங்கங்களுக்கு நிர்வாக குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


  ஐ.பி.எல். போட்டிக்கான நிதி ஒதுக்குமாறு மாநில சங்கங்கள் நிர்வாக குழுவை ஏற்கனவே வலியுறுத்தி இருந்தன.

  துபாயில் அடுத்த மாதம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கூட்டம் நடக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விக்ரம் லிமே பங்கேற்பார் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது .

  Next Story
  ×