search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    ராஞ்சி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆல் அவுட்

    இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    ராஞ்சி:

    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்களை குவித்தது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

    இதையடுத்து இன்று காலை துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட்களை இழந்து 401 ரன்களை குவித்திருந்தது. 



    உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களை குவித்த நிலையில் மூன்று விக்கெட்களை இழந்தது. இதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன்களை குவித்தார். 

    இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களையும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
    Next Story
    ×