என் மலர்

  செய்திகள்

  விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பரோடாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு
  X

  விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பரோடாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பரோடாவை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு.
  மாநில அணிகளுக்கிடையிலான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியொன்றில் பரோடா - தமிழ்நாடு அணிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின.

  டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் தேவ்தார் (46), வாக்மோட் (45), குருணால் பாண்டியா (30) சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பரோடா அணி 49.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தமிழக அணியின் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், அஸ்வின் கிறிஸ்ட், ஷா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

  பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கவுசிக் காந்தி (19), கங்கா ஸ்ரீதர் ராஜூ (15), பாபா அபராஜித் (28) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (77), விஜய் சங்கர் (53 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 77 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் பெங்கால் - ஜார்க்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியுடன் மோதும். இறுதிப் போட்டி 19-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
  Next Story
  ×