என் மலர்

  செய்திகள்

  மாநில ஆக்கிப்போட்டி: இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி.
  X

  மாநில ஆக்கிப்போட்டி: இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநில ஆக்கிப்போட்டியின் அரையிறுதியில் ஐ.ஓ.பி. - மத்திய கலால்வரி அணிகள் மோதின. இதில் ஐ.ஓ.பி. அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  சென்னை:

  இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

  இந்தியன் வங்கி கோப்பைக்கான இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. ‘நாக்அவுட்’ முறையில் போட்டி நடத்தப்பட்டது. நேற்றுடன் கால்இறுதி ஆட்டங்கள் முடிந்தன.

  இதன் முடிவில் போட்டியை நடத்தும் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., மத்திய கலால் வரி, ஐ.சி.எப். ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று காலை அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஒரு அரை இறுதியில் ஐ.ஓ.பி. - மத்திய கலால்வரி அணிகள் மோதின. இதில் ஐ.ஓ.பி. வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு இருந்தன. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஐ.ஓ.பி. வெற்றி பெற்றது.

  2-வது அரை இறுதியில் இந்தியன் வங்கி - ஐ.சி.எப் அணிகள் மோதின.
  Next Story
  ×