என் மலர்

  செய்திகள்

  இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
  X

  இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி வங்காளதேச அணிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
  கொழும்பு :

  முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி வங்காளதேச அணிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

  வங்காளதேச அணி கடந்த 2000-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனது. அந்த அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. 17 ஆண்டு காலத்துக்குள் வங்காளதேச அணி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. குறுகிய காலத்துக்குள் வங்காளதேச அணி 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. முன்னதாக இலங்கை அணி 18 ஆண்டுகளில் 100 டெஸ்டில் ஆடியதே சாதனையாக இருந்தது.


  கொழும்பு மைதானத்தில் நேற்று வங்காளதேச வீரர் தமிம் இக்பால் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

  100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 10-வது நாடு என்ற பெருமையை வங்காளதேசம் பெறுகிறது. அந்த அணி இதுவரை 99 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 76 ஆட்டத்தில் தோல்வி கண்டது. 15 டெஸ்ட் போட்டியில் டிரா கண்டது. தனது கடைசி 41 டெஸ்டில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள வங்காளதேச அணி தனது முதல் 58 டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே ருசித்தது. முதல் 99 டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தான் (7 வெற்றி) குறைந்த வெற்றியை பெற்ற அணியாகும்.

  வங்காளதேசத்தை சேர்ந்த 85 வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். அந்த அணி வீரர்களில் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 3,546 ரன்கள் குவித்துள்ளார். ஷகிப் அல்-ஹசன் 170 விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார்.

  100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்காளதேச அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். அதேநேரத்தில் தொடரை வெல்ல இலங்கை அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மோசமான பார்ம் காரணமாக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை வங்காளதேச வீரர் மக்முதுல்லா இழந்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறமாட்டார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×