search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் போல்ட் பங்கேற்பது சந்தேகம்
    X

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் போல்ட் பங்கேற்பது சந்தேகம்

    இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறிய காயத்தால் வெலிங்டனில் 16-ந்தேதி தொடங்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் போல்ட் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி டுனெடினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மழையினால் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் 16-ந்தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

    முதல் டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்டிற்கு இடுப்புப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் 15 ஓவர் வீசியதுடன் வெளியேறினார். கடைசி நாள் ஆட்டம் மழையினால் தடைபட்டதால் ட்ரென்ட் பந்து வீச வேண்டிய நிலை ஏற்படவில்லை.



    தற்போதைய நிலையில் 16-ந்தேதி (நாளை மறுநாள்) தொடங்கும் 2-வது டெஸ்டிற்கு அவர் உடற்தகுதி பெறாவிட்டால், அவருக்குப் பதிலாக டிம் சவுத்தி அணியில் சேர்க்கப்படுவார். வெலிங்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டிம் சவுத்தி சிறப்பாக பந்து வீசுவார். அவருடன் மேட் ஹென்றியும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×