என் மலர்

  செய்திகள்

  எஃப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அரையிறுதியில் செல்சியா
  X

  எஃப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அரையிறுதியில் செல்சியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதியில் 10 பேருடன் விளையாடிய மான்செஸ்டர் அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது செல்சியா.
  இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் தொடர் எஃப்.ஏ. இந்த தொடரில் கடைசி காலிறுதியில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  மான்செஸ்டர் அணி இப்ராஹிமோவிச் இல்லாமல் களம் இறங்கியது. 30-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் அன்டர் ஹெரேரா இரண்டு மஞ்சள் அட்டை வாங்கியதால் வெளியேற்றப்பட்டார். இதனால் மான்செஸ்டர் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இரண்டு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் செல்சியா அணியின் என்'கோலா கேன்டே ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் செல்சியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  செல்சியா அரையிறுதியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியுடனும், அர்செனல் மான்செஸ்டர் சிட்டி அணியுடனும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
  Next Story
  ×