என் மலர்
செய்திகள்

லா லிகா: டெபோர்டிவோவிடம் வீழ்ந்து முதல் இடதை பறிகொடுத்த பார்சிலோனா
லா லிகா தொடரில் டெபோர்டிவோவிடம் 1-2 என தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பறிகொடுத்தது பார்சிலோனா.
லா லிகா தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நேற்றைய போட்டிகளுக்கு முன் ரியல் மாட்ரிட் 25 போட்டிகளில் 18 வெற்றி, 5 டிரா மற்றும் 2 தோல்விகளுடன் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 26 போட்டிகளில் 17 வெற்றி, 6 தோல்வி மற்றும் 3 டிராவுடன் 60 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருந்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது. அதே சமயத்தில் பார்சிலோனா- டெபோர்டிவோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பார்சிலோனா 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. கடந்த போட்டியில் பி.எஸ்.ஜி.யை 6-1 என வீழ்த்தி வெற்றி பெற்ற பார்சிலோனா இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தோல்வியால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை இழந்துள்ளது. ரியல் மாட்ரிட் தற்போது 62 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 60 புள்ளிகளுடன் பார்சிலோனா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது. செவிலா 57 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. பார்சிலோனா முன்னிலை பெற வேண்டுமென்றால், பார்சிலோனாவை விட ரியல் மாட்ரிட் இரண்டு போட்டிகளில் தோல்வி அல்லது ஒரு தோல்வி மற்றும் டிரா செய்ய வேண்டும்.

Next Story