என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஃப்.ஏ. கோப்பை: மிடில்ஸ்ப்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி
    X

    எஃப்.ஏ. கோப்பை: மிடில்ஸ்ப்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி

    எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரில் மிடில்ஸ்ப்ரோ அணியை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கிடையிலான ‘கால்பந்து அசோசியேசன் சேலஞ்ச் கோப்பை’ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு காலிறுதிப் போட்டியில் மிடில்ஸ்ப்ரோ- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டேவிட் சில்வா முதல் கோலை அடித்தார். கோல் கம்பத்தின் வலது பக்கம் 6 யார்டு தூரத்தில் இருந்து சபலேட்டா கொடுத்த பாஸை ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடிக்க தவறினார். அந்த பந்து டேவிட் சில்வாவிடம் சென்றது. அதை சில்வா கோலாக மாற்றினார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவி்ல்லை.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் செர்ஜியோ அகியூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-0 என முன்னிலைப் பெற்றது. இடது பக்கத்தில் இருந்து லெராய் சானே கொடுத்த பந்தை செர்ஜியோ கோலாக மாற்றினார். அதன்பின் இரு அணி வீரர்களாலும் ஆட்ட நேரம் முடியும்வரை கோல்கள் அடிக்க முடியவில்லை. இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×