என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிரன் பாவெல்: சாமுவேல்ஸ் இல்லை
  X

  வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிரன் பாவெல்: சாமுவேல்ஸ் இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிரன் பாவெல் இடம்பிடித்துள்ளார். சாமுவேல்ஸ்க்கு அணியில் இடமில்லை.
  இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி மார்ச் 3-ந்தேதி நடைபெறுகிறது. 2-வது போட்டி 5-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 9-ந்தேதியும் நடைபெறுகிறது..

  இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரர் கிரன் பாவெல் இடம்பிடித்துள்ளார். இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் சுமார் 3 வருடங்கள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார்.


   கேப்டன் ஹோல்டர்

  உள்ளூர் லிஸ்ட் ‘ஏ’, மண்டலத்திற்கு இடையிலான சூப்பர்-50 போன்ற தொடரில் சிறப்பாக விளையாடியதால் பாவெல் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால், சுலைமான் பென், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனும் ஆன ஜான்சன் சார்லஸ், சுனில் நரைன், ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.


  சாமுவேல்ஸ்

  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 2. தேவேந்திர பிஷூ, 3. சார்லஸ் பிராத்வைட், 4. ஜோநாதன் கார்டர், 5. கம்மின்ஸ், 6. ஷேன் டவ்ரிச், 7. ஷனோன் கேப்ரியல், 8. ஷாய் ஹோப், 9. அல்சாரி ஜோசப், 10. எவின் லெவிஸ், 11. ஜேசன் மொகமது, 12. அஷ்லே நர்ஸ், 13. கிரன் பாவெல், 12. டேமியன் ஜேக்கப்ஸ், 13. ரெய்னார்டு லெவிரிட்ஜ், 14. கைல் மேயர்ஸ், 15. அந்த்ரே மெக்கார்தி, 16. ரெய்மன் ரெய்பெர், 17. கேமர் ரோச்.
  Next Story
  ×