என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
  X

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
  மும்பை :

  ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் 25-ந் தேதியும் தொடங்குகிறது.

  முன்னதாக ஆஸ்திரேலிய அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் வருகிற 17-ந் தேதி ஆரம்பமாகிறது.

  இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேர்வு குழுவினர் கூடி 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர். வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி இந்திய அணியில் தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையில் டெஸ்ட் போட்டி தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

  இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

  ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹோன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஸ்டீன் ஓகீபே, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், ஆஷ்டன் அகர், உஸ்மான் கவாஜா, ஜாக்சன் பிர்ட், மிட்செல் செப்சன், மேக்ஸ்வெல்.
  Next Story
  ×