என் மலர்

  செய்திகள்

  250 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு புஜாரா பாராட்டு
  X

  250 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு புஜாரா பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  250 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வீரர் அஸ்வினுக்கு புஜாரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
  ஐதராபாத் :

  45-வது டெஸ்டில் பங்கேற்றுள்ள அஸ்வின், 2-வது இன்னிங்சில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 252 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளார். இதன் மூலம் முதல் 45 டெஸ்டுகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர் என்ற சிறப்பும் அவரது வசம் அடைந்துள்ளது.

  இந்திய வீரர் புஜாரா நேற்று அளித்த பேட்டியில், ‘எந்த ஒரு எதிரணிக்கும் கடினமான சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இருப்பார். மற்ற அணிகள் அவரை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது திட்டம் போட்டு கொண்டிருக்கின்றன. 250 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி சாதனை படைத்த அவருக்கு எனது வாழ்த்துகள். ஒரு பேட்ஸ்மேன் போன்றே சிந்திக்கக்கூடியவர் அஸ்வின். தனது பலவீனம் எது, எந்த பகுதியில் பந்து வீசினால் சரியாக இருக்கும் என்று நன்கு யோசித்து செயல்படுவார்’ என்றார்.
  Next Story
  ×