என் மலர்

  செய்திகள்

  இந்தியாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்க விரும்புகிறோம்: ஆப்கானிஸ்தான்
  X

  இந்தியாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்க விரும்புகிறோம்: ஆப்கானிஸ்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்க விரும்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைவர் தெரிவித்துள்ளார்.
  கிரிக்கெட் விளையாடுவதில் தற்போது 10 அணிகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது. இதை 12 ஆக உயர்த்த ஐ.சி.சி. தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணி டெஸ்ட் அங்கீகாரத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுகுறித்து இறுதி முடிவை ஐ.சி.சி. வரும் ஏப்ரல் மாதம் எடுக்க இருக்கிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை இந்தியாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் விளையாட நாங்கள் விரும்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிஇஓ ஷபிகுல்லா ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘நாங்கள் கிரிக்கெட்டில் முன்னணியாக வளர இந்தியா அதிக அளவில் ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் எங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவது சரியானதாக இருக்கும் என்பதை அனைத்து ஆப்கானிஸ்தானியர்கள் சார்பில் என்னால் கூற முடியும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
  Next Story
  ×