search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்டில் விரைவாக 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அஸ்வின் சாதனை
    X

    டெஸ்டில் விரைவாக 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அஸ்வின் சாதனை

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர். அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இன்று அவர் முஷ்பிகுர் ரகீம் விக்கெட்டை கைப்பற்றினார். இது அவருக்கு 250-வது விக்கெட் ஆகும். 45-வது டெஸ்டில் அவர் 250-வது விக்கெட்டை எடுத்தார்.

    இதன் மூலம் அஸ்வின் குறைந்த டெஸ்டில் 250 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லி (ஆஸ்திரேலியா) 48 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருநத்து. இதை அஸ்வின் முறியடித்து அதிவேகத்தில் 250 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

    Next Story
    ×