என் மலர்

  செய்திகள்

  ஐதராபாத் டெஸ்ட்: வங்காள தேசம் 388 ரன்னில் ஆல்அவுட்- முஷ்பிகுர் ரஹிர் சதம் அடித்தார்
  X

  ஐதராபாத் டெஸ்ட்: வங்காள தேசம் 388 ரன்னில் ஆல்அவுட்- முஷ்பிகுர் ரஹிர் சதம் அடித்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்காள தேசம் 388 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் பேட்டிங் செய்து வருகிறது.
  இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்னுடனும், மெஹேதி ஹசன் மிராஸ் 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மெஹேதி நேற்றைய 51 ரன்னுடன் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். ஆனால் வங்காள தேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 127 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க வங்காள தேசம் 127.5 ஓவரில் 388 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

  இந்தியாவை விட 299 ரன்கள் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி செய்யாமல் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 1 ஓவரில் 1 ரன் எடுத்த நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
  Next Story
  ×