என் மலர்

  செய்திகள்

  ஐதராபாத் டெஸ்ட்: இந்தியாவிற்கு போட்டியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்காள தேசம்
  X

  ஐதராபாத் டெஸ்ட்: இந்தியாவிற்கு போட்டியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்காள தேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் ஆட்டத்தில் வங்காள தேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது.
  இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுமுன்தினம் (9-ந்தேதி) ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  பின்னர் வங்காள தேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. தமிம் இக்பால் 24 ரன்னுடனும், மொமினுல் ஹக்யூ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தமிம் இக்பால் நேற்றைய 24 ரன்னிலேயே ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 12 ரன்னிலும், மெஹ்முதுல்லா 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காள தேசம் 216 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

  6-வது விக்கெட்டுக்கு சாஹிப் அல் ஹசன் உடன் கேப்டன் முஷ்டாபிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. 216 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சாஹிப் அல் ஹசன் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

  அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 7-வது விக்கெட்டுக்கு ரஹிம் உடன் இணைந்த மெஹேதி ஹசன் மிராஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்கள்.  3-வது நாள் ஆட்டம் முடியும்வரை இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்னுடனும், மெஹேதி ஹசன் மிராஸ் 51 ரன்னுடனும் களத்தில் உள்ளன.  வங்காள தேசம் அணி தற்போது வரை 365 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு முன் வங்காள தேச அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்திவிட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது.
  Next Story
  ×