என் மலர்

  செய்திகள்

  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா, இம்ரான் தாஹிர் முதலிடம்
  X

  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா, இம்ரான் தாஹிர் முதலிடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கைக்கு எதிரான தொடரை 5-0 எனக்கைப்பற்றி ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. பந்து வீச்சாளர் தரவரிசையில் தாஹிர் முதலிடம் பிடித்துள்ளார்.
  தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 5-0 எனக்கைப்பற்றியது.

  இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டி அணிக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை 2-வது இடத்திற்கு தள்ளியுள்ளது தென் ஆப்பிரிக்கா.

  தென்ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை 98 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

  வங்காள தேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து முறையே 7-வது இடத்தில் இருந்து 12-வது இடம் வரை பிடித்துள்ளன.  பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் 761 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் 757 புள்ளிகளுடன் 2-வது இடத்தை  பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் நரைன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.  பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டு பிளிசிஸ் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டி காக் 5-வது இடத்தையும், அம்லா 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டி வில்லியர்ஸ் 2-வது இடத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் நான்கு வீரர்கள் முதல் 10 இடத்திற்குள் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×