என் மலர்

  செய்திகள்

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஷான் மார்ஷை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- ஸ்டீவ்வாக்
  X

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஷான் மார்ஷை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- ஸ்டீவ்வாக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னருடன் ஷான்மார்ஷ் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

  முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கூறியதாவது:-

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னருடன் ஷான்மார்ஷ் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

  புதுமுக வீரரான மெட் ரென்ஷா சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க வீரராக சிறப்பாகவே விளையாடினார்.இருந்தாலும் இந்திய மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஷான் மார்சுக்கு இருக்கிறது.

  மேலும் அவர் ஐ.பி.எல்.லில் விளையாடி உள்ளதால் இங்குள்ள சூழ்நிலையை நன்கு உணர்ந்து வைத்து இருக்கிறார் ஆசிய கண்டங்களில் ஷான் மார்ஷ் ரன்கள் குவித்து உள்ளார்.ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்களுக்கு எதிராக யுக்திகளை இந்திய வீரர்கள் வகுத்து வைத்து இருப்பார்கள்.

  ஆனால் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சுவீட்சன் ஆட்டத்தை அவர்கள் பார்த்தது இல்லை. இதனால் அவர் இந்திய தொடரில் அசத்துவார் என நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×