என் மலர்
செய்திகள்

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1270 கோடி இழப்பு
புதிய விதிமுறை மாற்றத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் குறைந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1270 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
மும்பை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.ஐ.சி.) கூட்டம் சமீபத்தில் துபாயில் நடந்தது.
இதில் வருவாய் பகிரிந்து அளிக்கும் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அதிக தொகை கிடைக்கும் வகையில் விதி இருந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகப்படியான தொகை அளித்தது.
இதற்கு மற்ற நாடுகள் அதிருப்தி தெரிவித்ததால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை மட்டும் வாக்களித்தது. மற்ற நாடுகள் விதிமுறை மாற்றத்துக்கு ஆதரவு அளித்தன.
ஏப்ரல் மாதம் நடக்கும் ஐ.சி.சி. கூட்டத்தில் இந்த விதிமுறை மாற்றத்துக்கு ஒப்புதல் பெற்ற பிறகு அமலுக்கு வரும்.
2014-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட விதிமுறையால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 2015-2023-ம் ஆண்டு கால கட்டத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்படி இருந்தது.
தற்போது புதிய விதிமுறை மாற்றத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் குறைந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1270 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
வருவாய் குறைந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் மற்ற நாடுகளை விட அதிக வருவாய் பெறுகிறது.

Next Story