என் மலர்

  செய்திகள்

  டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் யுக்தியில் சற்று குறைபாடு உள்ளதா?
  X

  டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் யுக்தியில் சற்று குறைபாடு உள்ளதா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் டி20 கிரிக்கெட் போட்டிக்கான யுக்தியில் சற்று குறைபாடு உள்ளது போன்று தோன்றுகிறது.
  இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றதும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

  டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வெண்டுமென்றால் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்ற யுக்தியுடன் களம் இறங்கினார். இதனால் பெரும்பாலான போட்டியில் ஐந்து பந்து வீச்சாளர்களை களம் இறக்கி அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோருக்கு பேட்டிங் பணியிலும் அதிகக் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே அஸ்வின், விக்கெட் கீப்பர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை வரிசையாக வென்றுள்ளார்.

  தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பையும் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒருமுனையில் ஒருவர் அடித்து விளையாடும்போது மறுமுனையில் நிற்கும் வீரர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று எதிர்பேட்ஸ்மேனுக்கு வசதியாக ஒவ்வொரு ரன்னாக (ரொட்டேட்டிங் ஸ்ட்ரைக்) எடுக்க வேண்டும். இந்த முறையில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி தொடரை 2-1 என கைப்பற்றியது.

  இது எண்ணத்துடன் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் களம் இறங்கியது. ரன்கள் குவிக்கும் போட்டியான டி20-யில் இந்தியா முதல் போட்டியில் 147 ரன்களும், 2-வது போட்டியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ் சிங், டோனி, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகிய 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். 120 பந்துகள் மட்டுமே என்பதால் இரு முனையிலும் நிற்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும்.

  ஆனால் இந்திய அணியில், தற்போது விராட் கோலி அடிக்க ஆரம்பித்தால் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடுகிறார். 2-வது போட்டியில் அப்படிதான் நடந்தது. கோலி முதலில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அப்போது லோகேஷ் ராகுல் நிதானமாக நின்றார். விராட் கோலி அவுட்டானதும் அதிரடி பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றுக் கொண்டார். மணீஷ் பாண்டே ஒவ்வொரு ரன்னாக எடுக்க ஆரம்பித்தார்.

  இதனால் ஒரு வீரர் 45 பந்தில் 70 ரன்களுக்கு மேல் குவித்த பின்பும், அணியில் 150 ரன்களை தாண்ட முடியவில்லை. இதேபோல்தான் கடைசி நேரத்தில் டோனி அனைத்து பந்துகளையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் ஒரு ரன் ஓடக்கூடிய நேரத்தில் அந்த ரன்னை தவிர்த்து விடுகிறார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் ஒன்றிரண்டு ரன்கள் குறைய வாய்ப்புள்ளது.

  ஒட்டுமொத்தமாக இரண்டு பக்கமும் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால்தான் அதிக அளவு ரன்கள் குவிக்க இயலும். அதைபோல் ரிஷப் பாண்ட், மந்தீப் சிங் போன்றோரையும் பயன்படுத்த கவனம் செலுத்த வேண்டும். தனது டி20 யுக்தி குறைவினால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த குறையை வரும் காலங்களில் விராட் கோலி போக்கினால் சிறப்பான வெற்றிகளை குவிக்கலாம்.

  இந்திய அணியில் மட்டுமல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக 200 ரன்களுக்கு மேலான ரன்னை சேஸிங் செய்யும்போது கெய்ல் ஒருபுறம் அதிரடியாக விளையாடினார். அப்போது விராட் கோலி அவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். கெய்ல் அவுட்டானதும் கோலி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் பெங்களூர் அணி சொற்ப ரன்களில் வெற்றியை இழக்கும் நிலை ஏற்பட்டது.
  Next Story
  ×