என் மலர்

  செய்திகள்

  முதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா
  X

  முதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஸ்டாயினிஸ் அபாரமாக விளையாடி 146 ரன்கள் குவித்தபோதும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.
  ஆக்லாந்து:

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

  அதிகபட்சமாக புரூம் 73 ரன்னும், குப்தில் 61 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

  இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே தடுமாறியது. 67 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 7-வது வீரராக களமிறங்கிய ஸ்டாயினிஸ் பொறுப்புடன் ஆடி சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

  ஆனால், மறுமுனையில் அவருக்கு துணை நின்ற பால்க்னர் 25 ரன்களிலும், கம்மின்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்டாயின்ஸ் 146 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், போல்ட், பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தோல்விடைந்தாலும், 146 ரன்கள் குவித்ததுடன், 3 விக்கெட்டுகளும் கைப்பற்றிய ஸ்டாயினிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

  இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
  Next Story
  ×