search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் தொடர்: கர்நாடகாவை வீழ்த்தியது தமிழ்நாடு
    X

    டி20 கிரிக்கெட் தொடர்: கர்நாடகாவை வீழ்த்தியது தமிழ்நாடு

    மாநிலங்களுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் தெற்கு மண்டல பிரிவில் கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு.
    தெற்கு மண்டலத்தில் இடம்பிடித்துள்ள கர்நாடகா- தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரவிக்குமார் சமர்த் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாட்டின் அனிருத், முகுந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனிருத் 4 ரன்னிலும், முகுந்த் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் 30 ரன்னும், தினேஷ் கார்த்திக் 45 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின் வந்த முருகன் அஸ்வின் அவுட்டாகாமல் 34 ரன்கள் எடுக்க தமிழ்நாடு 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிழக்கு மண்டலத்தில் திரிபுராவை ஒடிசாவும், வடக்கு மண்டலத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியை டெல்லியும், மத்திய மண்டலத்தில் சத்தீஸ்கர் அணியை உ.பி.யும் வீழ்த்தியுள்ளது.
    Next Story
    ×