search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களுக்கிடையிலான டி20 தொடரின் முடிவுகள் விவரம்
    X

    மாநிலங்களுக்கிடையிலான டி20 தொடரின் முடிவுகள் விவரம்

    மாநிலங்களுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதி்ல் எந்தெந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன என்பதை பார்ப்போம்.
    கிழக்கு மண்டலத்தில் இடம்பிடித்துள்ள அசாம் - ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. அதன்பின் அசாம் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணி 18.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசாம் அணியின் அமித் வெர்மா 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    மத்திய மண்டலத்தில் இடம்பிடித்துள்ள ரெயில்வேஸ் - மத்திய பிரதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரெய்ல்வேஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ராவத் 38 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன நமன் ஓஜா 54 ரன்கள் எடுக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தெற்கு மண்டத்தில் இடம்பிடித்துள்ள கேரளா - ஆந்திரா அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆந்திரா அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணி வெற்றி பெற்றது.

    தெற்கு மண்டலத்தில் இடம்பிடித்துள்ள ஐதராபாத் - கோவா அணிகளுக்கிடையிலான மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியின் டான்மே அகர்வால் 48 பந்தில் 91 ரன்கள் குவித்தார். பின்னர் களம் இறங்கிய கோவா அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வடக்கு மண்டலத்தில் இடம்பிடித்துள்ள ஹிமாச்சல பிரதேசம் - சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சர்வீசஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மேற்கு மண்டத்தில் இடம்பிடித்துள்ள மகாராஷ்டிரா - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×