search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெபியை முந்திய செரீனா
    X

    ஸ்டெபியை முந்திய செரீனா

    ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் அதிகம் பட்டம் வென்ற வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை முந்தினார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் தனது மூத்த சகோதரி வீனசை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினர். அவர் ஆஸ்திரேலியா ஓபனை 7-வது முறையாக வென்றார். ஒட்டு மொத்தமாக செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றிய 23-வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.

    இதன் மூலம் அதிகம் பட்டம் வென்ற வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை முந்தினார். செரீனா 23 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7, பிரெஞ்சு ஓபன் 3, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 6) 2-வது இடத்தில் உள்ளார். ஸடெபிகிராப் 22 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 4, பிரெஞ்சு ஓபன் 6, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 5), 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க்ரெட் கோர்ட் 24 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலியா ஓபன் 11, பிரெஞ்சு ஓபன் 5, விம்பிள்டன் 3, அமெரிக்கா ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். இனி வரும் காலங்களில் மார்க்கரெட்டை முந்தி செரீனா புதிய வரலாறு படைப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
    Next Story
    ×