என் மலர்

  செய்திகள்

  முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா
  X

  முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
  தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் 3-வது வீரராக களம் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார்.

  பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.1 ஓவரில் 71 ரன்கள் சேர்த்தது. டி காக் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்லாவுடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். அம்லா 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

  3-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் கேப்டன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்கா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. தென்ஆப்பிரிக்கா 34.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளிசிஸ் 55 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
  Next Story
  ×