என் மலர்

    செய்திகள்

    லோதா கமிட்டியின் பரிந்துரை ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்யலாம்: கவாஸ்கர் கவலை
    X

    லோதா கமிட்டியின் பரிந்துரை ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்யலாம்: கவாஸ்கர் கவலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லோதா கமிட்டியின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற சீர்திருத்தம் ரஞ்சி டிராபி தொடரின் தரத்தை நீர்த்துப் போக செய்துவிடும் என்று கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் சீர்த்திருத்தம் கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பரிந்துரைகளை எடுத்துரைத்தது. இதில் பெரும்பாலானவற்றை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதில் முக்கியமானது ஒன்று ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பதுதான்.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, விதர்பா, மராட்டியம் உள்பட நான்கு கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. குஜராத்தில் குஜராத், சவுராஷ்டிரா உள்பட மூன்று சங்கங்கள் உள்ளன. லோதா கமிட்டியின் ஒரு மாநிலத்திற்கு, ஒரு வாக்கு என்ற பரிந்துரையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மூன்று சங்கங்கள் கலைக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களுக்கு புதிய உறுப்பினர்கள் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பால் அவர்களுக்கு ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இந்த அணிகள் முதல் தர போட்டிகளில் விளையாடியது கிடையாது. இதனால் லோதா கமிட்டியின் பரிந்துரை ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும் கவாஸ்கர் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பதில் என்ற பிரச்சினையும் இல்லை. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் முதல்தர கிரிக்கெட்டிற்கு இன்னும் தயாராகாத நிலையில் அவர்களை ரஞ்சி டிராபிற்கு கட்டாயம் அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், அது காட்டாயம் ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

    உதாரணத்திற்கு மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களில் சிறப்பான கிரிக்கெட் விளையாடுவதற்கான அடிப்படை வசதிகள் இல்லை. முதல்தர போட்டிக்கே தயாராகாத நிலையில் இருக்கும்போது அவர்கள் ரஞ்சி தொடருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தரமான கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்யும் என்று நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டிற்கு சிறப்பானதாக இருக்கப்போவதில்லை’’ என்றார்.
    Next Story
    ×