என் மலர்

  செய்திகள்

  தென்ஆப்பிரிக்கா தொடர்: கடைசி நேரத்தில் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள்
  X

  தென்ஆப்பிரிக்கா தொடர்: கடைசி நேரத்தில் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் கடைசி நேரத்தில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 எனக்கைப்பற்றியது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றி முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

  இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஏற்கனவே இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி நேரத்தில் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  இசுரு உடனா, திக்சில்லா டி சில்வா, சீகுகே பிரசன்னா ஆகியோர் நீக்கப்பட்டு லஹிரு குமாரா, விகும் சஞ்ஜெயா, ஜெப்ரி வாண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  வேகப்பந்து வீச்சாளர்கள் குமாரா மற்றும் சஞ்ஜெயா டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தனர். இதில் குமாரா 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இடம்பிடித்தார். குமாரா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை விளையாடியது கிடையாது. லெக் ஸ்பின்னர் பிரசன்னாவிற்குப் பதிலாக வாண்டர்சே இடம்பிடித்துள்ளார். ஆனால் இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது.

  இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் வாண்டசே இடம்பிடித்துள்ளார்.
  Next Story
  ×