search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: வீனசை 6-4, 6-4 என எளிதில் வீழ்த்தி செரீனா சாம்பியன் பட்டம் வென்றார்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: வீனசை 6-4, 6-4 என எளிதில் வீழ்த்தி செரீனா சாம்பியன் பட்டம் வென்றார்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ‘ஆஸ்திரேலிய ஓபன்’ மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதிப் பெற்றனர்.

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் செரீனாவின் ஆட்டத்திற்கு வீனஸ் வில்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவிலலை. இதனால் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றுள்ளார்.


    செரீனா பந்தை திருப்பி அனுப்பும் காட்சி

    கிராண்ட்ஸ்லாம் தொடரில் செரீனாவின் 316-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன் ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் எந்தவொரு நபரும் இவ்வளவு வெற்றியை ருசித்தது கிடையாது.


    அக்காவிற்கு எதிராக சர்வீஸ் போட தயாராகும் செரீனா

    ஒட்டுமொத்தமாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஸ்டெபிகிராபை 3-வது இடத்திற்கு தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்கரெட் 24 கிராண்ட்ஸ்லாம் பதக்கம் வென்று முதல் இடத்தில் இருக்கிறார்.


    வெற்றிக்குப்பின் அக்காவை கட்டித்தழுவி ஆறுதல் கூறும் செரீனா

    செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியா ஓபனை 7 முறையும், பிரெஞ்ச் ஓபனை 3 முறையும், விம்பிள்டன் ஓபனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 6 முறையும் கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×