என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆஸ்திரேலிய ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க- செக்குடியரசு ஜோடி சாம்பியன்
By
மாலை மலர்27 Jan 2017 10:27 AM GMT (Updated: 27 Jan 2017 10:27 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க - செக்குடியரசு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2017-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) ஜோடி, சுயாய் பெங் (சீனா)- அண்டிரியா ஹவாக்கோவா (செக்குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இரு ஜோடியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் கடும் போராட்டத்திற்குப் பின் பெத்தானி மாட்டேக்- சேன்ட்ஸ் (அமெரிக்கா)- லூசி சபரோவா (செக்குடியரசு) 6 (4) - 7 (7) தோல்வியடைந்தது.
பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய இந்த ஜோடி 2-வது செட்டையும், 3-வது செட்டையும் தலா 6-3 எனக்கைப்பற்றி ஆஸ்திரேலிய ஒபன் தொடரை கைப்பற்றியது.

Next Story
×