என் மலர்

  செய்திகள்

  உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் ராஜீவ் சுக்லா உள்பட 6 நிர்வாகிகள் ராஜினாமா
  X

  உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் ராஜீவ் சுக்லா உள்பட 6 நிர்வாகிகள் ராஜினாமா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன் எதிரொலியாக உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட 6 நிர்வாகிகள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
  கான்பூர் :

  லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன் எதிரொலியாக உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் சுக்லா, துணைத்தலைவர்கள் தாஹிர் ஹசன், மதன் மோகன் மிஸ்ரா, இணைச் செயலாளர்கள் ஜெயின், சுஹைப் அகமது, பொருளாளர் டி.என்.தான்டன் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

  இதில் சுக்லா, ஜெயின் ஆகியோர் அதிகபட்சமாக 9 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டின் படியும், மற்றவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வகையிலும் விலகியுள்ளனர்.
  Next Story
  ×