search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி போட்டியிலும் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது ஆஸி.
    X

    கடைசி போட்டியிலும் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது ஆஸி.

    வார்னர், ஹெட் சதத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 4-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அசத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41.3 ஓவரில் 284 ரன்கள் குவித்தது. வார்னர் 128 பந்தில் 19 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 179 ரன்களும், ஹெட் 137 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ர்களுடன் 128 ரன்களும் விளாசினார்கள்.

    பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீர்ர ஷர்ஜீல் கான் 79 ரன்னும், பாபர் ஆசம் 100 ரன்களும், உமர் அக்மல் 46 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 312 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×