என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் முன்னணி வீராங்கனை ரட்வன்ஸ்கா அதிர்ச்சி தோல்வி
  X

  ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் முன்னணி வீராங்கனை ரட்வன்ஸ்கா அதிர்ச்சி தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 3-ம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்கா 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
  ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான 3-ம் நிலை வீராங்கனையான அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா 2-வது சுற்றில் குரோசியாவின் மிர்ஜனா லூசிக்-பரோனியை எதிர்கொண்டார்.

  இதில் உலகத் தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் லூசிக்- பரோனி ரட்வன்ஸ்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அவர் ரட்வன்ஸ்காவை 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த தொடரில் முன்னிலை வீராங்கனை ஒருவர் முதன்முறையாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

  கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியவர் ரட்வன்ஸ்கா. விம்பிள்டன் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×